பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156;D வல்லிக்கண்ணன் கனிமொழி மணிமொழி என்ற இருவரின் காதல் கதை இக்காவியத்தின் பொற்சரடாக மிளிர்கிறது. மலேசியா செல்லும் கப்பலில் பாமணி இளைஞன் மணிமொழியை சந்திக்க நேர்கிறது. அவன் தனக்கு கனிமொழியிடம் ஏற்பட்ட காதலையும், அவன் அறுபத்து நான்கு கலை களையும் பயின்று தேர்ந்த பின்னரே அவனை மணம்புரிய விரும்புவதாக அவள் கூறியதையும் மணிமொழி கூறு கிறான். ஆய கலைகள் அனைத்தையும் அறிந்த சுவாமி இராமதாசரைக் கண்டு உதவி நாடப் போவதாகவும் சொல்கிறான். அவனுக்கு உதவி புரியப் பாமணி முன் வருகிறார். சுவாமியின் வழி காட்டலின் பேரில், சுவாமியிடம் கலைகள் பயின்று தேர்ந்த ஒருவரிடம் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி அடைகிறான். மணிமொழி. அறுபத்து நான்கு கலைகள் பற்றியும் கவிதையில் தெளிவு படுத்தியிருக்கிறார் பெருங்கவிக்கோ. அவற்றில் கவிஞரின் புலமையும் கவிதை ஆற்றலும் நன்கு ஒளி வீசுகின்றன. எடுத்துக்காட்டாக சிலம்பம் பற்றிய விவரிப்பைக் கூறலாம். இடமும் வலமும் மிகச் சென்றே இங்கும் அங்கும் காலாடி திடமாய் வலம் இடம் தானோடி திசைகள் தன்னை அளந்தாடி உடலம் பர்ய்ந்து உறழ்ச்சியினால் உண்ர்ந்து கீழ்மேல் துர்க்கிப்பின் அடடே திறமை காட்டினனே. அலைபாய் கங்கை காவிரியாய்! அடுத்து வாட்கலை பற்றிய வர்ணனை இப்படி திட்டப்பட்டுள்ளது