பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 口互57 மண்டித் தெளிந்து சதிராடி வலமும் இடமும் சரிசெய்து மண்டித் திரிந்து சகடமிட்டு வார்ப்பும் வடிப்பும் மிகக் காட்டித் துண்டித் திடும் நல்லார்க் கலையை துறைகள் சால மிகக் கற்று நன்றாய் மணிமொழி வாள்வீச நற்குரு அனைவரும் மகிழ்ந்தனரே." இவ்விதம் பல்வேறு கலைகள் குறித்தும் பெருங் கவிக்கோ ஆற்றலுடன் வர்ணித்துப் பாடியிருப்பது வியந்து பாராட்டப்பட வேண்டியதாகும். இந்தக் காவியத்திலும் இயற்கை அழகு பற்றிய வர்ணனைகளும், உவமைகளும் படிப்போர்க்கு மகிழ்ச்சி, அளிக்கும் வண்ணம் நிறைந்து காணப்படுகின்றன. 'ஆண்சிங்கம் தான். அதிகாலையில் அடர்ந்த் பிடரிமயிர் குலுக்கி மாண்புறு உடலம் சிலிர்க்க எழுந்து வரு இரை தேடப் புறப்படல் போல்' கதிரவன் கருக்கல் கரை கடந்தான் என்று: காலைக்காட்சி அழகாக சுட்டப்பட்டுள்ளது. - கற்றவரைச் சூழ்கின்ற வறுமைபோல கருத்திருளும் சூழ்கின்ற வேளை ‘கரவிலார் இதயம் போல் ஒளிதிகழ் நன்னகர் கோலாலம்பூர்” இவ்விதம் சுவைத்து இன்புறத் தகுந்த ந்யமான உவமைகளுக்குக் குறைவில்லை; ப்ெருங்கவிக்கோவின்மூன்றாவது நெடுங்காவியமான "இரு ண்ட மேகங்கள் முற்றிலும் சமுதாயப் பார்வை