பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15. புதுக் கவிதைகள் பெருங்கவிக்கோ மரபுக் கவிதையில் சாதனைகள, புரிந்தவர்: புரிவதில் ஆர்வம் உடையவர். ஆயினும், காலத்தின் தேவையாகக் கவிதைக் கலையில் தோன்றிய புதுக்கவிதை எனும் யாப்பில்லாக் கவிதையை அவர் வெறுத்து ஒதுக்கி விடவில்லை. - காலம் வழங்கும் புதுமை வளர்ச்சி கையால் மறைத்துப் பயனில்லை. ஆலமரம் போல் படர்த்துள தமிழ்க்கவி அணிநலப் புதுமை வேண்டுதும் யாம் ஏலப் பொருளாய்த் தமிழை எண்ணி இதயம் விரும்பு மாரெல்லாம் ஒலம் இட்டே எழுதியே புதுக்கவி உரிமை கொண்டாடுதல் பயனில்லை. எதுகைக்கு வரினும் எதுகை மோனையாய் எழுதும் மரபு வழி யுடையோர் - இது கைக்கு மென்றே புதுப் புதுப் பாதையில் ஏகும் மரபுவழி உளமுடிையார் எது வழி அதிலே எனக்கேட்கின்றீர்களும்! எவ்வழிெேசம்மை-வழியென்றால்