பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 163 விளைத்த நெல்மணிகளை கொழுத்தவர்கள் குடல் நிரம்பிடக் கொடுத்துக் கொண்டே உள்ளனர். ஆனால், இன்னும் உழைத்தவர்கள். விடிவு பெறவில்லையே! ஏன்? உழவர்கள் உழுத ஏர் உலகப் பயன் கண்டதே! ஆனால் உழுதவர்கள் வாழ்வு உரமற்றுப் போனதேன்?" என்று சிந்தனை வளர்க்கிறார் கவிஞர். தான் எடுத்த எழுதுகோல் பயனற்றுப் போகக்கூடாது என எண்ணு கிறார். நொந்த வாழ்வை மாற்ற ஏலாத எழுதுகோலை நோக்கி அவர் எச்சரிக்கை விடுக்கிறார். 'சதியை உடைக்கும் சக்தி தா! அல்லது, சமநிலை ஆக்கும் உத்தி தா! இல்லையேல் உன்னைத் தூக்கி யெறிந்து விடுவேன்!" ல்ன்பது அவர் கூறும் எச்சரிக்கையாகும். ஒரு உண்மைக்காக என்ற கவிதை மாபெரும் உண்மை ஒன்றை உணர்த்துகிறது.