பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 வல்விக்கண்ணன் உழைப்பாளித் தோழர்கள் பற்றி, அவர்கள் உழைப்பை உறிஞ்சித் கொழுப்போர் பற்றி, எழுத்து வெடிகுண்டுகள் அதிகம் அதிகமாக உற்பத்தி செய்யப் பட்டு விட்டன. அப்படியும் நிலைமை மாறவில்லை. ஒ! எழுத்து வெடிகுண்டுகளே! வெடிக்கவில்லையே ஏன்?" என்று கேட்கிறது ஒரு கவிதை, வறுமையின் மீது சினம் கொண்டோம் சிறுமையின் மீது ஆவேசப் பட்டோம். எரிமலை-பூகம்பம்-ஊழிக்காற்று என்றெல்லாம் . எழுத்துத் துப்பாக்கிகளில் அழுத்தமான சிந்தனைகளின் தோட்டாக்களை நிரப்பி எட்டுத் திசையும் சுட்டோம்! அந்தத்தோட்டாக்கள் இன்றுவரை வெடிக்காமலேயே வீணாகிப் போயின. அதனால் எந்த நீதியும் எழவில்லை. ஆகவே அவை "சமையலுக்குத வாத நெருப்புகள் தண்ணிர் வராத வறண்ட நீரூற்றுகள் ஊமையின் வாய் உளறல்கள் ஒரு செயலையும் துண்டாத உருப்படாத எங்கள் எழுத்துப் பம்மாத்துக்கள்!’ என்று விமர்சன ரீதியில் பேசுகிறது கவிதை,