பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 9 167 'ஒரு புல்லாங்குழலின் ஏக்கம் என்ற கவிதை புலலாங்குழல் வீணை பாடல் ஆகியவை அவற்றைப் பயன் படுத்தத் தெரிந்த திறமைசாலிகளிடம் சேர்ந்திருந்தால் நல்ல பலன் விளைந்திருக்குமே என்று எண்ணி ஏங்குவ தாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மீட்டத் தெரியாதவனிடத்தில் கிடைத்த வீணை" காற்றை ஊட்டத் தெரியாதவனிடத்தில் கிடைத்த குழல், இராகம் அமைக்கத் தெரியாதவனிடத்தில் கிடைத்த பாடல் பாழாகிப் போனது யார் குற்றம்? என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. உச்சி வெயில் நேரத்தில், தொந்தி சரிந்த பெரியவர் உட்கார்ந்திருக்க ரிக்சாவை சிரமத்தோடு இழுக்கும் உழைப்பாளி; வண்டி வண்டியாய் பழங்கள் இருந்தும், ஒரு பழத்தை எடுத்துத் தின்று தன் பசி தாகம் அடக்கக் கூசுகிற விற்பனையாளன்; பூவிற்கும் போதும் தன் தலையைக் காடாக விட்டிருக்கும் பூக்காரி, பொன் செய்யும் தட்டான் மனைவி காதில் பித்தளை- எத்தனை வகை என்ன உலகம் என்று படம் பிடிக்கிறது- உலகம் ஒரு கனவு’ எனும் கவிதை. "மாறும் காலம் என்று வரும்? எங்கே? எங்கே? சிந்தனை ஒட்டம்! தெளிவே இல்லை!"