பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16. மொழி பெயர்ப்புக் கவிதைகள் தமிழில் சிறப்பாகக் கவிதை படைக்கும் ஆற்றல் பெற்ற கவிஞர்கள் பிறமொழிக் கவிதைகளை விரும்பித் தமிழில் மொழி பெயர்ப்பெயர்ப்பது உண்டு. மகாகவி பாரதியார், ச.து.சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை முதலியவர்கள் தங்கள் மொழி பெயர்ப்புத் திறமையால் பற்பல கவிதைகளைத் தமிழாக்கி, தாய் மொழிக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள். பெருங்கவிக்கோ சேதுராமனும் அம்மரபைப் பின் பற்றி வெற்றி கண்டிருக்கிறார். மகாத்மா காந்தி பேரில் இந்தியாவின் பன்மொழிகளிலும் பாடப்பட்ட கவிதை களை அவர் மொழிபெயர்த்து வாழ்க நீ எம்மான்! என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்திஜி பின் நூற்றாண்டு விழாவில் அவருக்குத் தமிழர்கள் சார்பில் பெருங்கவிக்கோ செலுத்திய உயர்ந்த அஞ்சலி இக்கவிதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் தமிழ்க் கவிதைகளுடன் மலையாளம் இந்தி, தெலுங்கு, உருது, குசராத்தி, வங்கம், ஒரியா, சிந்தி, வடமொழி, மராட்டி, அசாம் கன்னடம், ஆங்கிலம் காஷ்மீரம் ஆகிய மொழிகளின் சிறந்த கவிஞர்கள் மகாத்மா பற்றிப் பாடிய நற்கவிதைகளின் மொழி பெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன. ஆ-11