பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


17. பயண அனுபவங்கள் தமிழ்-தமிழர்-தமிழ் இனம் என்ற உணர்வோடு இவற்றுக்கு உரிமையும் பெருமையும் சேர்க்கும் இலடசிய வெறியோடு தமிழகம் எங்கும் பணியாற்றி வரும் பெருங் கவிக்கோ, தமிழர் வசிக்கும் உலகநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கிறார். 1981-ஆம் ஆண்டிலிருந்து, உலகத் தின் பல நாடுகளிலும் நடைபெறுகின்ற உலகக் கவிஞர் மாநாட்டிற்கு அவர் தொடர்ந்து சென்று வருகிறார். அங்கெல்லாம் நிகழ்கின்ற கவியரங்கம், கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு, கவிதைகள் கட்டுரைகள் மூலம் தனது கருத்துக்களைத் துணிச்சலோடு முழங்குகின்றார். பின்னர், தனது பயண அனுபவங்களை நூல்களாக வெளியிட்டு: தமிழ் வாசகர்கள் பயனடைய உதவுகின்றார். இவ்வகையில், பாங்காக் பயண நூல், கெய்ரோவில் பெருங்கவிக்கோ, துருக்கியில் பெருங்கவிக்கோ, இசுரேலில் பெருங்கவிக்கோ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இப்படித் தனது பயண அனுபவங்களை பெரிய நூல் களாக உரைநடையில் எழுதிப் பிரசுரிப்பதற்கு முன்னர், அவர் பன்னாட்டுப் பயணங்களில் தான் பெற்ற இன்பங் களை தனித்தனிக் கவிதைகளாக எழுதி, அவற்றை "அழகின் வெள்ளம் எனும் தொகுப்பாகத் தந்துள்ளார் மலை நாட்டின் செந்தேன் கூடு- ரிஞ்சிங் தோட்டம், தேம்சு எனும் தேனாறு, இயற்கை விந்தை நயகரா