பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18. முடிவுரை "பதினேழாம் நூற்றாண்டில் குமர குருபரரும், சிவப் பிரகாச சுவாமிகளும், பதினெட்டாம் நூற்றாண்டில் சிவஞான முனிவரும் தாயுமான அடிகளும், பத்தொன்ப நூற்றாண்டில் இராமலிங்க அடிகளும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இறையுணர்வு கலந்த பாக்களைப் பெருமளவில் பாடியாற்றிய பணியை இந்த நூற்றாண்டில் பெருங்கவிக்கோ சேதுராமன் செய்து வருகிறார். இ வ் வா று அறிஞர் சி ல ம் .ெ பா லி சு. செல்லப்பன் எழுதியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்குப் பெரும்பணி ஆற்றிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் கடவுள் பக்தியும் ஆன்மீக உணர்வும் நிறைந்த பாடல்களை மிகுதியாகப் பாடி, புள்ளார். அத்துடன் தாய்மொழிப் பற்று, தேசபக்தி, சமூக சீர்திருத்த ஆர்வம், தனி மனித மேம்பாடு, புதுமைச் சிந்தனைகள் கொண்ட கவிதைகளையும் பாரதியார் அதிகம் இயற்றியிருக்கிறார். பாரதி வழியில் வந்த முதல தலைமுறைக் கவிஞர் களான பாரதிதாசன். ச. து. சு. யோகியார், நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை. தேசிக விநாயகம் பிள்ளை' சுத்தானந்த பாரதியார் ஆகியோரும் இறை உணர்வு, மொழிப்பற்று, நாட்டுப் பற்று. சமூக சீர்திருத்தம் முதலிய