பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 181 குறிக்கோள்களுடனேயே இனிய பாடல்களைப் பாடி யுள்ளனர். அவ்வழியிலேயே கவிஞர் வா. மு. சேதுராமனும் அதிக அளவில் கவிதைகள் பாடி, பெருங்கவிக்கோ எனும் சிறபபுப் பெயர் பெற்றுள்ளார்.பாரதியைவிட மிகுதியான தமிழ்-தமிழர்-தமிழ் இனப்பற்று சேதுராமன் கவிதை களில் உயிர் நாதமாக ஒலிக்கிறது. பாரதி போலவே நாட்டுப் பற்றை பரந்த அளவில் இந்திய உணர்வாகவும், அதற்கு மேலும் விரிந்த உலகம் தழுவும் மானிட நேய மாகவும் கொண்டு பெருங்கவிக்கோ கவிதைகள் படைத் திருக்கிறார். பாரதிதாசன் கூட ஆரம்பகட்டத்தில் இறை உணர்வுப் பாடல்களை அதிகம் எழுதியுள்ளது நினைவு கூரப்பட வேண்டியது ஆகும். அதன் பின்னரே அவர் பகுத்தறிவுச் சிந்தனையும், தமிழ் இன உணர்வும் தமிழ்ப்பற்றும் செறிந்த கவிதைகளை உணர்ச்சி வேகத்தோடு பாடினார். பாரதிதாசனின் உணர்ச்சி வேகமும் உயிர்த்துடிப்பும் சேதுராமன் கவிதைகளிலும் பெருக்கெடுத்து ஒடுவதைக் காண முடிகிறது. பாரதியார் பொதுவுடைமைச் சிந்தனையை வர வேற்றார். பாரதிதாசன் ஒரு காலக் கட்டத்தில் பொது உடைமைத் தத்துவத்தை வரவேற்றுப் பாடினார். சேதுராமனோ பொதுவுடைமையே மக்கள் குல நல்வாழ் வுக்கும், உழைப்பாளர் வளத்துக்கும், உலக மீட்சிக்கும் ஏற்ற மார்க்கம் ஆகும் என்று தம் கவிதைகளில் வலியுறுத்தி யிருக்கிறார். - பா ர தி யா ரி ட ம் தெய்வபக்தி மிகுந்திருந்தது. புத்துலகப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அவர் வளர்க்க வில்லை. பாரதிதாசன் பகுத்தறிவுச் சிந்தனைகளையே அழுத்தமாகவும் வேகமாகவும் கவிதைகளில் பதிவு செய் தார், இவ்விருவர் தடங்களையும் அடியொற்றி நடக்க