பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 0 வல்லிக்கண்ணன் கண்டுணர்ந்து வரவேற்கும் மனமும், நல்லதைப் பாராட்டும் உள்ளமும் உடையோருக்குத்தான் பஞ்சம் இந்த நாட்டிலே - அறுபதாம் ஆண்டை நிறைவு செய்யும் பெருங் கவிக்கோ சேதுராமன் அறுபத்து ஒன்றுக்கும் அதிகமான புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த ஆண்டும் ஒரு காவியம் வெளியிட இருக்கிறார். இது ஒரு பெரும் சாதனை என்பதில் சந்தேகமில்லை. தமது பணிகளும் படைப்புகளும் போதிய அளவு கவனிப்பைப் பெறவில்லையே என்று அவர் உளம் வருந்த வேண்டியதில்லை. இந்தநாட்டின் சூழலும் நாட்டினரின் மனப் பண்பும் அப்படித்தான் இருக்கின்றன. எனினும், ஆாளம் தேறிச் செய்வினையில் ஊக்கம் பெருக உழைத்து கொண்டிருப்பவர்களை என்றுமே காலம் வஞ்சித்து శ! தில்லை. அவர்களது உழைப்பை, ஆற்றலை, அவற்றின் விளைவுகளை காலம் நிச்சயம் கவனிக்கும். வாழ்க பெருங்கவிக்கோ. அவரது படைப்புகளும் பணிகளும் வெல்க!