பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0, 11 வறுமையை ஒழிப்போம், இல்லை வையத்தை ஒழிப்போம், ஈனச் சிறுமையை ஒழிப்போம், இல்லை செகத்தினை அழிப்போம் மோட்ச மறுமையை இம்மை காண்போம்! வரலாற்றை மாற்றி ஓங்கும் பெரும் பேற்றை இந்தியாவின் பெற்றிமை காக்க வைப்போம்!” சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், மக்களிடம் காணப்படுகிற குறைபாடுகளையும் சேது ராமனின் கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன. உயர்ந்த கருத்துக்களைச் சொல்லும் கவிக்குரல் உணர்ச்சியூட்டும் போர் முரசாகவும் நாவலிப்பதை அவரது நூல்கள் காட்டுகின்றன. எதிர் நீச்சலிட்டுப் போராடி வரும் ஒரு எழுச்சிக் கவியின் எண்ணக் குமுறல்கள் அவருடைய கவிதைத் தொகுப்புகளில் அடங்கியுள்ளன. அதே வேளை யில் உணர்வும் உற்சாகமும் ஊட்டும் நம்பிக்கையின் நாதமும் அவற்றினூடே ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. இருட்டறையில் உள்ளதடா உலகம் என்றான் எம்.புரட்சிப் பாவேந்தன்; தமிழர் வையம் இருட்டறையில் உள்ள நிலை நீக்குதற்கே இதயத்தின் ஒளிவிளக்கை ஏற்றி வைப்போம்; கருக்கிருளைப் புறங்காண்போம், பன்னாட்டுள்ளும், காண் தமிழர் நிலைஉயர சிந்தனையால் அரும்பணிகள் செய்வதற்கே அழைத்தோம், எத்திக்கும் தமிழர்நெறி பரப்புதற்கே எழுந்திடுக! உயர்ந்தெழுக! சுடர்க! வெல்க!” தமிழ் நாடும் தமிழ்மொழியும் தமிழரும் உலகத்தில்,