பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்: கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பக்தியும் ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய் தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு ஏற்படுவதேயில்லை. அப்படித் தமிழன்னை வாழ்த்துப் பாடுவதிலும் அவர் புதுமைகள் நயங்கள் பல சேர்த்துத் துதிப்பது படிப்பதற்கு இனிய விருந்தாக விளங்குகிறது. 'அன்னையே தமிழே இன்ப அமிழ்தத்தின் மறுபிறப்பே! கன்னலே என்பேன் ஆயின் கைக்குமே அதுவும் ஒர்நாள்