பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வல்லிக்கண்ணன் கண்டு கவிஞர் மனம் புழுங்குவது தவிர்க்க இயலாத, தாகும். அவருடைய மனவேதனை கவிதைகளில் பொதிந்து கிடக்கிறது. நேற்றுத் தோன்றிய மொழிகள் எல்லாம் நிலைத்து நிற்கையிலே-என்றோ தோன்றிச் செழித்த மொழியென் தமிழ்த்தாய், தோற்றுப் போவதுவோ? ஊமை கண்ட கனவாய்த் தமிழர் உரிமை போவதுவோ?-எங்கள் பானம் எழுத்து பதறாய்க் காற்றில் பறந்து சாவதுவோ? கூவும் குரல்வளைக் கொள்கை முழக்கக் குறிக்கோள் அஞ்சுவதோ?-இனிய நாவுக் கன்னை நற்றமிழ் அரசி நானிலம் துஞ்சுவதோ? நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. "தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம்! புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம்? என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :