பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 வல்லிக்கண்ணன் பெருங்கவிக்கோ. இந்நிலைமை மாற என்ன என்ன செய்யவேண்டும் என்று யோசனைகள் கூறுகிறார். இளைஞர்களே. விழிப்புற்று; வீறு கொண்டு செயல் புரியுங்கள் என்று ஊக்கம் அளிக்கிறார். 'தமிழ் முழக்கம்" என்ற அவருடைய கவிதைத் தொகுப்பு இத்தகைய பாடல் களைக் கொண்டிருக்கிறது. 'வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம்! அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம்! அவரிடம் போய் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம்: பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம்! வஞ்சகத்தை அஞ்சாமல் எதிர்த்திடுவோம்! தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்! கொடுமை எனறால் எஞ்சாமல் எரியிடுவோம்! தமிழே ஆளும் எழில்நாட்டை ஆக்கிடுவோம்! வேற்றுமைதான் கிஞ்சிற்றும் இல்லாமல் செய்ய இன்றே கிளர்ந்தெழுங்கள் இளைஞர்களே அஞ்ச வேண்டாம். என்ன நாம் செய்துள்ளோம்; முறையாக இவ்வுலகு. நம்மையும் நம் மொழியையும் அறிவதற்காக நாம் என் செய்தோம் என்று சிந்திக்கச் சொல்கிறார் கவிஞர்.