பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் - 23 எல்லாமே இருக்கின்ற இயல்கள் முற்றும் இணையில்லாத் தமிழ் மொழியில் இன்பம் பொங்க சொல்லித் தரும் நாளென்றோ அந்நாள் எங்கள் சோர்வகலும் வெற்றி நாள்! நன்னாள் அந் நாள் இல்லாமல் போய்விடுமோ? தமிழா இன்றே எழுந்தே நில்! தமிழ்முழக்கி எடுநீ வாளை! வெறும் உணர்ச்சி ஊட்டும் முழக்கமாக இல்லாது, பயனுள்ள யோசனைகளையும் கவிஞர் எடுத்துக் கூறுவது போற்றப்பட வேண்டியதாகும். அறிவியலை, அணுவியலை அண்டம் முற்றும் ஆராயும் நல்லியலை வானம் தன்னின் நெறியியல்கள் செறியியலை, அறிஞர்போற்றும் நிலைக்கின்ற புதுமைதரு இயலை, நல்ல பொறியியலை மற்றும் உள இயலை எல்லாம் போற்றித்தேன் செந்தமிழில் சேர்க்க இன்றே வெறிகொள்வோம்! இந்த வெறி ஒன்றே நம்மின் விடிவெள்ளியாய்நின்று விளக்கம் நல்கும்!” மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். "முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்! முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்