பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்" 25 மேற்கொண்டது. பின்னர் தமிழ் ஊர்திப் பயணம் நடத்தியது. வழி நெடுகிலும் உள்ள முக்கிய ஊர்களில் மக்களிடையே தமிழ் முழக்கம் செய்து, தனது கொள்கை களை எடுத்துக் கூறி, மக்களைத் தமிழ் உணர்வு கொள்ளும்படித் துரண்டியது. தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டும். அனைத்து ஆட்சித் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கண்டிப்பாகச் செயலாக்கம் பெற வேண்டும். அனைத்துக் கல்வியும் தமிழ் வாயிலாகவே பயிற்றுவிக்கப் பட வேண்டும். தமிழகத்தின் வணிக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள். அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்ப் பலகையும் தமிழில் எழுதப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ்தான் நிர்வாக மொழி யாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்இவற்றைக் கோரிக்கைகளாகக் கொண்டு இவ் எழுச்சிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருங்கவிக்கோ. தமிழா ஒன்று சேர்! தமிழால் ஒன்று சேர்! தமிழுக் காக ஒன்று சேர்! இம்முழக்கங்களை ஒலித்தவாறு முன்னேறிய தமிழ்நடைப் பயணம் தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவைப் பெற்றது. - o தமிழகத்தில் தமிழ்த்தாயின் இன்றைய அவலநிலையை மாற்றி தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரும் முயற்சியில், நற்கருத்துக்களை உயிரும் உணர்வும் நிறைந்த கவிதை களாக இயற்றியுள்ள கவிஞர், ஏறத்தாழ ஐம்பது நாட்கள் தமிழகம் முழுதும் நடந்து நடந்து கொள்கை முழக்கம் செய்தது அரும்பெரும் சாதனையே ஆகும். இதன் மூலம் தான் வெறுமனே எழுதிக் கொண்டிருக்கும் கவிஞரல்ல, எழுத்தில் வடித்துத்தரும் உயர் கருத்துக்களுக்குச் செயஆ வடிவமும் கொடுக்கிற வீரமறவரும்கூட என்பதை நாடு உணரும்படி செய்த சாதனையாளரும் ஆகிறார் பெருங்கவிக்கோ. ஆ-2