பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. வல்லிக்கண்ணன் அதுபற்றி எல்லாம் எண்ணிப் பார்க்க நேரம் இல்லாது, கருமமே கண்ணாகத் தமிழ்ப் பணி புரிந்து கொண்டிருக்கும் கவிஞர் சேதுராமனின் மனம் அபூர்வ மாக எப்போதாவது பெருமிப் பெருமூச் செறிவதும் இயல்பாக இருக்கிறது. அவரும் மனிதர் தானே? 'அல்லும் பகலும் அடித்துப் புரண்டு தமிழ்ப் பணி செய்தாலும் அறிந்து கொள்பவர்கள் மிகமிகக் குறைவு. செல்வாக்குள்ள இதழ்கள், எத்தனை முறை நாம் உலகம் சுற்றினாலும் ஏறெடுத்துப் பார்க்கவும் அறிந்து கொள்ளவும் எண்ணமி லாத இருண்ட மனமுடையனவாக உள்ளன. நல்ல தகுதியை, வெல்லும் முயற்சியோடு உருவாக்கிக் கொண்டாலும், தமிழ் மண் ஊமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது, உயரிய செயலாற்றல் மிக்கவர்களை இனங் கண்டு ஊக்குவிக்கும் பொறுப்பு. அரசுக்கும், சமுதாயத்துக்கும் உண்டு. இதனை இவ்விரு தரப்பினரும் சரியாக நிறைவு செய்யாத நிலை. இத்தகைய மனப்புழுக்கங்களில் துடித்துக் கொண்டிருப் பவர்களில் நானும் ஒருவன்' என்று அவர் தனது உள்ளத்தின் உணர்வை கெய்ரோவில் பெருங்கவிக்கோ’ என்ற நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். "எழுதும் கவிஞர் மட்டுமல்ல பெருங்கவிக்கோ எழுதிய எழுத்துக்களுக்குச் செயல் வடிவம் தரும் தமிழ்' மறவராகவும் திகழும் வா.மு. சேயை வையகத் தமிழர்கள் உணர்ந்து-ஒல்லும் வகையில் உதவுவது தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும் நன்மையை விளைக்கும்' என்று அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ('தமிழ் நடைப் பாவை அணிந்துரையில்) கூறி யி ரு ப் பது உண்மையே உயர்வு நவிற்சியன்று. .