பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go 32 வல்லிக்கண்ணன் அழைத்த நம்மின் பாரதத்தாய் ஆக்கம் ஊக்கம் எண்ணுவோம்! அல்லும் பகலும் ஒய்வில்லாமல் நன்மை உண்மை பண்ணுவோம்! வறுமை நமது வாழ்வில் வாரா வாழ்க்கை உயர்வு காணுவோம்! வாழப்பிறர்கை ஏந்தி வாழும் வழக்கம் பேணல் நாணுவோம்! சிறுமை கொடுமை எண்ணமின்றிச் சேர்ந்து சூழ்ந்து முயலுவோம்! தேசம் பெரிது மாசில்லாமல் செழுமை ஆக்கம் பயிலுவோம்!'" இந்த நோக்கத்தோடு கவிஞர் விழிப்பூட்டும்-எழுச்சி யூட்டும்-உணர்ச்சிக் கவிதைகளை இருபது கட்டளை கள்’ என்ற தலைப்பில் ஆக்கியுள்ளார், நமது நாட்டின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு அமைப்பு முறை களில் மலிந்துள்ள சீர்கேடுகளைச் சாடுகின்றன இ க் க வி ைத க ள் . இந்த இழிநிலைகளைப் போக்கி சமுதாயத்தையும் நாட்டையும் சீர்படுத்திச் செம்மையுறச் செய்வதற்கான திட்டங்கள் தெளிவாக விளக்கப்படு கின்றன. அதற்கு பாரதப் பிரதமர் அறிவித்த இருபது அம்சத்திட்ட ம் ஆதாரமாக அமைந்துள்ளது. மக்களை சிந்திக்கத் துண்டும் வகையில் கவிதைகள்: படைக்கப்பட்டிருக்கின்றன. ‘விடுதலைதான் பெற்று வாழ்ந்தோம்-தீய விதியை மாற்றினோமே?-ஒங்கும் கெடுதலைகள் தன்னைப் போக்கும் கேண்மை ஆற்றினோமா?" என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறார். அன்றாட