பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ( 33 வாழ்க்கையின் அத்தியாவசியப் பெருள்களின் விலைகள் ஏறிக்கொண்டேதான் இருக்கின்றன. 'உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்

  • -விலை உயரஉயரப் பறந்தால்-இந்த மண்ணில் நாமும் வாழ்வதெங்கே?-பெரும் மாற்றங்கள் வேண்டாவோ?’

இதற்கான மாற்றாகக் கவிஞர் முன் வைக்கும். யோசனை துணிகரமானது, அந்த எண்ணத்தை அவர். அழுத்தமாகவே கூறுகிறார் 'நிலமெலாம் பொதுமை ஆக்கி நித்தமும் உழைப்போருக்கே தலமெல்லாம் உரிமை ஆக்கித் தவம்போன்ற உழவர்தம்மின் புலம்மாற்றிக் கூட்டுழைப்பாய் பூமியில் உழைக்கும் மாற்று நலம்செய்தால் அன்றி இந்த நாடுமுன் னேறாதென்பேன்!” மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும். வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப் புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும்!