பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இ வல்லிக்கண்ணன் அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின் அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும் நேர்மைவழி வாழ்க்கை நடத்திட வேண்டும்! துன்பம், துயரம், வறுமை இவைகளையே உடன் பிறப்புகளாகக் கொண்டு ஏழ்மையில் வாடும் கிராம மக்களோடு இணைந்து வாழ்ந்தவர் கவிஞர் சேதுராமன் எனவே கிராம மக்களின் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்தவர். இந்தப் பட்டறிவின் பயனாக அவர் உணர்ச்சிச் செறிவோடு மக்களின் அவலநிலையைப் பாடல்களாக்கியிருக்கிறார். புண்ணியன் சென்று பாவப் புதர்முன்னே நிற்றல் போலும் கண்ணியன் சென்று ஈனக் கயவர்முன் இளித்தல் போலும் பண்ணிசை கோட்டான் ஆர்த்தல் பயன்இசை என்றல் போலும் திண்ணிய உழைப்புச் செம்மல் சிறுமைமுன் தேய்ந்தே ஓய்வான்!' எவ்வளவு தான் உழைத்தாலும், உழைக்கும் மக்களின் விளை வெல்லாம்-உழைப்பின் பயன் எல்லாம்-உை யாமல் உண்ணுகிற தருக்கருக்குச் சேர நேரிடுகிறது. உழைப்பவர் தவிக்கின்றார் பணமில்லாமல்; t "பிணந்தின்னும் கூட்டத்தார்கள் பெருகுதல் போல இன்று பணந்தின்னும் கூட்டத்தார்கள் பாரதம் பெருகி விட்டார்!