பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் D 37 பன்னலம் அடையவேண்டும்! பாரெலாம் நம் பொருட்கள் நன்னலப் பவனி வந்து நலம்தர வேண்டும்! எங்கும் இன்னல்கள் இல்லா வாழ்க்கை இலங்கிடச் செய்ய வேண்டும்!" தனி மனிதர் வாழ்விலும் சரி, நாட்டின் நிலைமை யிலும் சரியே, வளமும் நலமும் பெருகுவதற்கு எல்லோரும் உழைத்தாக வேண்டும். இது தவிர்க்க முடியாத விதியே ஆகும். இதைக் கவிஞர் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்த மாக எடுத்துக் கூறுகிறார். 'இல்லாமை ஒழிய வேண்டும் எல்லாரும் உழைக்க வேண்டும் நல்லாறாம் ஈதொன்றைத்தான் நாமென்றும் ஏற்கவேண்டும்! வல்லமை சொல்லில் அல்ல, வற்றாத செயலில் காட்டி வெல்லவே வேண்டும் நம்மின் வேதனை மாற்ற வேண்டும்’ என்று அவர் அறிவுறுத்துகிறார். நாட்டில் வீண் பேச்சுப் பெருகி விட்டது. பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் அறிவிக்கிறார். ஆண்மைசால் பேருழைப்பை அன்னை நம் நாட்டுக்காக்கி, வீண்பேச்சைக் குறைத்துத் தீய வீணரை ஒழித்தே அன்பாம்