பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் வாழ்க "ஆற்றல் மிகுந்த அருங்கவிஞனின் சில அடிச்சுவடுகள்’ எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், என் தவநெறிக் குருநாதரின் தண்னொளியாலும் என்றன் மணிவிழா வெளியீடாக ஒப்பற்ற ஆய்வு மேதை வல்லிக்கண்ணனார் எழுதிய ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் என்ற இந்த நூல் வெளி வருகிறது. இன்று நான் ஈட்டியுள்ள என்றன் உயிர் மூச்சான கவிதைத் துறையின் சாதனைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன். ஏதோ ஒரு இனம் தெரியாத, ஆனால் இயற்கைக்கும்-இறைமைக்கும் தெரிந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பும்-வேகமும், உயிர்த்துடிப்பும் என்னுள்ளே எப்போதும் ஆவேசப் பெருக்கெடுத்த புயல்களாகவும் பிரளயங்களாகவும் உருவெடுத்து என்னை ஆட்டிப் படைத்த ஆட்டங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து முயன்று, முயன்று கண்ட வெற்றிப் பயணத்தின் தொடர்ச்சியே, “ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்' என்று முதுபெரும்: எழுத்துத் தவஞானியார் வல்லிச்கண்ணன் அவர்களின் இந்நூல் பெற்ற பேறு எனக் கருதுகிறேன். என் இளமைக்கால வளர்ச்சிப் பரிணாமங்களில் மூன்று வகை மோதல்கள் சூழ்ந்திருந்தன. ஒன்று இந்திய, சிந்தனை, இரண்டு திராவிட தமிழ் தேசியச் சிந்தனை