பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ9 வல்லிக்கண்ணன் தங்கிடும் பொருளெடுத்துத் தலைநகர் தில்லி சேர்ப்போம்! அங்கிங்கெனாத வாறே அரும்பொருள் சேர்க்கைசெய்வோம்!” இவ்வாறு மேலே மேலே அடுக்கிச் செல்கிறார் 'எல்லை ஒன்றின்றிப் பொருள்கள் சேர்ப்போம் பயன் தரு நிலையையெல்லாம் ஒருமுகமாகச் செய்வோம், உரிமைகள் சமமே என்போம்' என்று சொல்லும் கவிஞரின் கற்பனை இனிமைகளை அழகுகளைத் தொடுகிறது கவிதை ஒட்டத்தில். - காசுமீர் ஆப்பிள் இன்பக் கணிச்சுவை தன்னை நம்மின் மாசிலாக் கன்னியாகுமரி வயல்உழை உழவன் உண்டு பாசங்கள் பெருகச் செய்வோம்! பயன்தரு கன்னி முத்தைக் காசுமீர் உழத்தி பூண்டு கலைஞானம் விளங்கச் செய்வோம்! மேம்படு இராசசு தானின் மென்னகைப் பெண்கள் செய்யும் தேம்படு நுண்கலைகள் திகழொளி இழைகள் தம்மை தாம்பூண்டு கேரளத்துச் சந்தனக் குமரிப் பெண்கள் ஆம்பல்வாய் பூக்கக் காண்போம் அழகுக்கே அழகு காண்போம்!” இருபது கட்டளைகள்' நாட்டை உயர்த்தக் கூடிய நல்ல திட்டங்களை உணர்ச்சிகரமான ந ைட யி ல்