பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆயதுல மகுநத அருங்கவிஞர் 0 41 சொல்லும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும். நாடு வளமுறவும் முன்னேறவும் இளைஞர்களையே நம்பி இருக்கிறது. நாட்டின் இதயம் நல்இளைஞரேயாவர். அதனால்தான் பெருங்கவிக்கோ இளைஞரை நோக்கிப் பாடுகிறார். இதயங்கள் இந்த நாட்டின் இளைஞரே நீங்கள் அன்றோ? பதம்பெற வாழ்வுப் பாதை பலப்பல மேன்மை கூட்ட நிதம்உழைப்பைத்தொ ழுங்கள்! நிகரிலா எப்ப ணிக்கும் இதம்பெறும் ஆற்றல்கொண்டே ஏற்றங்கள் காண்பீர் என்றும் சரிசம கோசலிச வாய்ப்பினை ஆக்கி வாய்மையின் துணையால் வெல்வோம் என்னும் கவிஞர் உறுதியாய்க் கூறுகிறார். 'பணிகள்தான் இல்லை என்னும் பாதகம் இல்லை என்போம்! அணிபெரும் வகையில் ஓங்கும் ஆய்பல பணிக ளுக்கும் துணிவுடன் இளைஞர் செல்லும் சுடர்புகழ்த் திட்டம் காப்போம்!! மணிமணியாக அன்னை மாபூமி கொழிக்கச் செய்வோம்! மொழிகளினால் பேதங்கள் வளர்த்து நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு செய்வோரை வன்மையாய் கண்டிக் கிறார். கவிஞர். ஆ- 3