பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 45 ஒன்றினை ஒன்று தான் தழுவியே வாழும்! இந்த உலக இயற்கையைக் கற்றிட வேண்டும்! அன்றன்று சிந்தனை புதுக்கிட வேண்டும் உயிர் அருமை சமைத்திடும் ஆற்றல்கள் வேண்டும்!” விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி சிந்தனைகள் வளர் க்கும் கவிஞர், தென் வியட்னாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்ப்ை எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன. 'பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல் பிழையென்றால் அப்பிழையைச் சிறுநாடும் செய்யாமல் இருத்தல் ஒன்றே செம்மையாம்' என அழுத்தமாகப் பதிவு செய்கிறார் கவிஞர், போரிடுதல் போல ஒரு கொடிய பாவம் பூமி மிசைக் கண்டார் யார்? யாரிதனை ஆதரித்தார்? எம்மதம் தான் நாசத்தை வரவேற்ற துண்டு? வேரினிலே வெந்நீரை ஊற்றலைப்போல் விரி உலக மரத்தில் வெம்மை - நீரினை நீர் ஊற்றுகிறீர்! அந்நீர் செந்நீர்! நெறியுமிதா? நேர்மை காண்பீர்! என்று இடித்துரைக்கிறார். சிலி பற்றியும் வங்கதேசம் பற்றியும் உணர்ச்சி துளும்பும் கவிதைகள் பாடியுள்ளார் பெருங்கோவிக்கோ.