பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வல்விக்கண்ணன் உலக நாடுகளை வியந்தும், அவர்கள் செயலைப் பாராட்டியும் பரிந்தும் பாடும் இயல்பு பெற்றுள்ள கவிஞர் எந்த நாடு அநீதி செய்யினும் வன்மையாய் அதைக் கண்டித்துக் குரல் எழுப்பத் தவறுவதில்லை. எவர் செய்தாலும் குற்றம் குற்றமே என்று சுட்டிக் காட்டி, தட்டிக் கேட்கும் நேர்மைத் துணிச்சல் கவிஞர் சேதுராமனின் உள்ளத்தில் உறைகிறது, கொரியாவின் பயணிகள் விமானம் ஒன்று வான வெளியில் எல்லைதவறி ருசியாவின் எல்லைக்குள் புகுந்து விட்டது என்று குற்றம் சாட்டி, சோவியத் ருசியா அந்தக் கொரிய விமானத்தைச் சுட்டு வீழ்த் தியது. இது முறை அன்று? மனிதாபிமானம் அற்ற செயலே யாகும் என்று உணர்ந்த கவிஞர் அறச்சீற்றத் துடன் கவிதை படைத்துள்ளார், 'தன்னுடைமை தன்னாடு தன்னின் வானம் தமதெனவே எல்லைக்கோட்டைத் தான் போட்டு மன்னுபெரும் பொதுவுடமை காத்தால் எந்த வகையினிலே உலகு பொதுவுடைமை ஆகும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். வைய மெல்லாம் பொது வுடைமை மலர வேண்டும் 腺惠}岛岛G呼 வாழ்வாங்கே உலகிணைந்து வாழ வேண்டும் நையச்செய் கொடுமையெலாம் போகவேண்டும் நடுநிலையால் உலகநெறி உருசியாவைப்போல் வையகத்தின் அமுதாகக் கிடைக்க வேண்டும் கருத்துக்கே மதிப்பளிக்கும் முதல்வன் ஆயின் ஐயகோ எனக் கதற உருசியாவும் தீ அநீதி செய்யின் கண்டித்தல் கடமை அன்றோ? ஈழத் தமிழரின் போராட்டம் பற்றியும், இலங்கையில் சிங்களர் செய்த கொடுமைகள் குறித்தும் கவிஞர் கொதித்