பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 47 திருக்கிறார், இலங்கையில் நடந்த படுகொலைகள் மற்றும் வன்முறைச் செயல்களைக் கண்டும் அமெரிக்கா வம் இதர நாடுகளும் அவற்றைக் கண்டிக்க முன்வராது வாளா இருந்ததைக் கண்டித்தும் குற்றம் சாட்டியும் அவர் உணர்ச்சியோடு பாடியிருக்கிறார். குறைகள் இல்லா உலகம் பற்றிக் கனவு வளர்க் கிறார் கவிஞர். அவர் விரும்பும் கனவுலகம் எப்படி இருக்கும்? புத்துலகம்' என்ற பாடல் அதை அறிமுகம் செய்கிறது. சேர்த்துச் சேர்த்துப் பதுக்கி வாழும் தீயவ ரங்கில்லை தேசம் கண்டம் மொழிகள் என்னும் சிறுமைப் பிரிவங்கில்லை வேர்க்க வேர்க்க உழைப்போர் தவிர வேறு யாரும் இல்லை வெற்றியுண்டு தோல்வி இல்லை வீணரென் பாரில்லை. அங்கே கயமை செய்வாரில்லை தனி உடைமை பேசிப் பொதுவுடமை மாய்ப்பாரில்லை. தண்டம் இல்லை, சலிப்பு இல்லை, குற்றமற்ற இளமை தான் உண்டு. பிணி முடிபுகள் இல்லை ஆணை யில்லை, ஏவலில்லை, அடிமை என்பதும் இல்லை. 'இசையும் எழிலும் இணைந்து பேசும் ஈடில்லாத உலகம் ஏற்றத் தாழ்வு இழிவு உயர்வு என்பதறியாப் புவனம் வசையில்லாத உலகம்.” என்று புத்துலகக் கனவு காண்கிறார் கவிஞர், இப்படிப் பட்ட உலகம் இனிமையான உலகமாகத்தானே இருக்கும்!