பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. குருபக்தியும் ஐயப்பன் அருளும் பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும். பகுத்தறிவை வர வேற்கும் பழமையின் சீர்மை போற்றும். புதுமையின் பயனை வாழ்த்தும் தேசியம் பரவும். செந்தமிழர் தனி உரிமையும் செப்பும். உத்தமர் காந்தியையும் போற்றும். சமதர்ம மாவீரன் லெனினையும் பாராட்டும், ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.' . இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார், இக்கூற்றின் உண்மையை பெருங்: கவிக்கோவின் கவிதைப் படையல்கள் எடுத்துக் காட்டும். தமிழ் உணர்வும் தமிழ் இனப்பற்றும் தேசீய ஒருமைப்பாட்டு நாட்டமும், ஒரே உலகம்-உலக மக்களின் ஒற்றுமை எனும் கனவுகளும் அலைமோதும் கவிக்கடல் உள்ளத்தில் ஐயப்ப பக்தி உணர்வும். சற்குருநாதர் சாது குருசாமிகள் மீதான பக்தியும் சதா அலை வீசிக் கொண்டிருக்கின்றன. இவ் உணர்வெ. ழுச்சியால் உந்தப்பெற்று கவிஞர் சேதுராமன் சாது குருசாமி பாமாலை, ஐயப்பன் அருளமுதம் என்று பக்திப் பாடல்களை, போற்றிப் பனுவல்களை, உள்ளத்தின் உணர்வலைகளாக வாரி வழங்கியிருக் கிறார்,