பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 49 முப்பது ஆண்டுகளாக அவர் ஐயப்பன் ஆலயம் சென்று வருகிறார், ஐயப்பன் ஆலயம் செல்வதற்குரிய நோன்பினை நெறியோடு கடைப்பிடித் தொழுகி, உள்ள் உறுதியோடு சென்று வருவதால் எனக்கு நிறைந்த துணிவும் தெம்பும், மேன்மையும் ஏற்படுகிறது, ஐயப்ப பக்தர்கள் பலர் உண்மையை மறந்து சடங்கிற்கும் கோசத்திற்கும் மட்டுமே சென்று வரும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். நோன்பு நேரத்தில் ஒருவேளை உணவே உட்கொள்ள வேண்டும், தீய சிந்தனைகளை நீக்க வேண்டும். இப்படி நியதியைப் பின்பற்றி நடந்தால், இவ்வழி முறையால் நல்ல பெருமை அடைய முடியும்’ என்று பெருங்கவிக்கோ அனுபவ பூர்வமாக அறிவிக்கிறார். தான் பெற்ற இன்பம் ஏனையோரும் பெறுவதற்காக அன்புடன் அழைத்து ஆற்றுப்படை இயற்றியுள்ளார் =&јаfrТ. “அருட்செல்வம் தேடுங்கள் அன்பர்களே இறை ஆற்றலில் கூடுங்கள் தோழர்களே!’ என்று அழைத்துப்பக்திப்பாடல்கள் பாடுகிறார். சாதுகுரு. சாமிகள் மீதும் பாமாலை இசைத்துள்ளார். உள்ளததின் உணர் வில் முகிழ்த்தெழுந்ததால் இப்பாடல்களில் இயல் பான ஒட்டமும் இனிய சொல்லாட்சியும் சான்றோரின் அருள் அமுதத்திற்கு ஈடான இதயக் கனிவின் விளைவான நயங்களும் கலந்து உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன. 'உண்டிடும் உணவிலே உறைந்தருள் குருவே கண்டிடும் பொருளிலே கவிந்தருள் குருவே விண்டிடும் சொல்லொம் விளைந்திடும் குருவே தொண்டிலே துணைவரு சுடர்கதிர்க் குருவே இவ்விதம் படிப்போரின் உள்ளத்தையும் இழுத்துச் செல்லும் பான்மையில் அமைந்துள்ளது இப்பாமாலை.