பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv மூன்று இறை ஆண்மைச் சிந்தனை. இந்த மூன்று வகை யான தாக்கங்களோடும், நான் உடன்பட்டும் முரண் பட்டும், உண்மை தேடல் முயற்சியில் என்னை நானே தெளிவுபடுத்திக் கொண்டு. எனக்கென ஒரு தனிப் பாதையைப் புதுப்பாதையை வகுத்துக் கொண்ட நெறியே இத்தகைய வெற்றி என்று கருதுகிறேன். காலங்களுக்குத் தக்கவாறு செயற்பாடுகளை மேற் கொள்வதற்கு இயற்கை மனிதர்களைத் தேடிக் கொண்டி ருக்கிறது. எள் முனை அளவு அந்தக் கூறுகள் மாந்தரிடத் தில் இருந்தாலும் அவர்களைக் காலம் தனக்குச் சாதக மாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய காலம் தரும் நன்தோ தீதோ அதன் வழி அறிவைச் செலுத்தி, பொறி துவங்கச் செய்யும் நிலைபாடுகளுக்கு ஈடு கொடுக்கும் கட்டாயத்தின் தன்மையே இன்று எந்தவித வாய்ப்பும் வசதியுமற்ற, எழுத்தறிவில்லாத, உலகத்தில் மிகவும் பின் தங்கிய பாமரத்தனமான ஒரு பகுதியில் பிறந்த சேது ராமனின் பாராட்டும் வாழ்வாக அமைந்துள்ளது என்று கருதுகிறேன். திராவிட இயக்க, தமிழ் நலம் கருதிய சிந்தனைகள் என்றன் தமிழ்-தமிழர் உணர்வுகளுக்கு மெருகூட்டியது. இளந்தளிராக இருந்த போது வெள்ளையனே வெளி யேறு” என்று முழங்கிய எழுச்சி, இந்திய தேசியத்தை அறிய வைத்தது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கருத்து வழித் தாக்கத்தில் வயப்பட்டபோது தந்தை பெரியாரைப்போல் திருநீறு அணியாத துறவி என் குரு நாதராகக் கிடைத்ததால் மதம் கடந்த ஒரு இறை யாணமைப் பார்வை கிடைத்தது. இந்த மூன்று உணர்வு களையம் ஒருங்கிணைக்கும் வாய்ப்பின் வழித்தடத்தால் உலகக்கவிதை உறவு-தமிழுறவு சமஉரிமை எண்ணங்கள் கைகொடுத்தது. இதனால் உலக தேசியப் பார்வை முசிழ்த்தது. இந்த வழி வழியான காலத்தின் சிந்தனை களையே என்றன் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறேன்.