பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 5 ! நாகமணிச் சோதிஒளி ஏகஒளி வீசும் நாடும் வளம் கூடிமகிழ்வோடு கொஞ்சிப்பேசும் தாகமொடு ஈகைஅருள் ஈயுமணிகண்டர் சபரிமலை அய்யப்பன் வாழும் அருள்மலையே!” பேர் ன்ற சபரிமலை வளம் பாடும் பக்திப் பாடல் களைச் சான்றாகக் கூறலாம். ஐயப்பனை எண்ணிப் பாடும் பக்தி உணர்வு நிறைந்த பாடல்கள் அடியார்கள் மரபில் வந்த மெய்யான பக்தரின் இதயக் கனிவாகத் திகழ்வதைக் காண முடியும், எடுத்துக்காட் டாக ஒன்று "வேரிலே பழுத்த விரியலாக் கனியே வெற்றிக்கு வித்தாகும் முத்தே! வேதனை ஆற்றிட இன்பமாய் வந்து விளைஅருள் மாமருந்தே! நெஞ்சத் தேரிலே இருக்கும் தேன்சுவை அணியே! தித்திக்கும் முக்கனி அமுதே! தேவர்கள் துயரம் தீர்த்திட உலகில் தெய்வமாய் வந்த அய்யா! நேரிலே காண நீள்தவம் செய்தோம் நெஞ்சகம் உருகிட வந்தோம்! நேர்மையே! வாய்மையே! நீதியே! ஒளியே! நிலைப்பொருள் ஆகிய மதியே! பாரிலே, ஊரிலே, உலகிலே அறம்செய் பக்தர்கள் உய்ந்திட வந்தோம்! பரமனின் புதல்வா! சிரம்மிகத் தாழ்ந்தோம் பார்த்தருள் செய்க அய்யப்பா!'