பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மதங்களை சாடும் சிந்தனை வேகம் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் உணர்வின் ஊற்றுக் களாகப் பக்திப் பாடல்கள் பாடியுள்ள பெருங்கவிக்கோ முழுக்க முழுக்க ஆத்திகக் கவிஞர் அல்லர். சிந்தனை வேகம் பொங்கிப் பாயும் சுடர் அறிவுக் கவிதைகளை மதங்களைச்சாடியும், போலிமதவாதிகளை வன்மையாகக் கண்டித்தும் அவர் பாடியிருக்கிறார். இவர் ஒரு நாத்தி கரோ என்ற மயக்கத்தை உண்டாக்கும் அவற்றை மட்டுமே படிக்க நேர்ந்தால். கவிஞரை நன்கறிந்த கவிக்கொண்டல் மா. செங்குட் டுவன் இது குறித்து தெளிவு படுத்தியிருப்பது நினைவு கூறத்தக்கது. அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களில் சிலருக்குப் பெருங்கவிக்கோ பெரியநாத்திகராகத் தோன்று வார். இன்னும் சிலருக்கு பெரிய ஆத்திகராகத் தெரிவார். யார் என்ன நினைத்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. தமது உண்மை மனச்சாட்சி வழியே அவர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் இறை நம்பிக்கையுடையவர்தாம். ஆனால், இன்றைய ஆத்திக வாதிகள் கூற்றுகளையெல்லாம் அப்படியே ஏற்றுக் 'கொள்ளும் கண்மூடித்தனமான பக்தர் அல்லர் பகுததறி வாளர் நுழைய முடியாத இடத்தில்கூட நுழைந்து ஆத்திகக் கோட்டையையே தகர்க்கும் அதிர்வேட்டுக் கவிஞர் அவர் பகுத்தறிவுப் பக்தர் என்று அவரைக்