பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வல்லிக்கண்ணன் அன்பை அறிவை அறநெறி முழக்கத்தை பண்பைப் பட்டறிவை பயன்தரு முயற்சிகளை திண்மை ஊக்கத் தெறிவைத் திறமாக்கி வாழ்வியல் முறையை வடித்தெடுத்தார்.நம்தமிழர் பாழ்மதங்கள் தந்த பகைமைக் கருத்துகளை ஏற்றதம் தமிழர் ஏன் மறந்தார் நம் நெறியை?’ என்று அவர் வருத்தப்படுகிறார். 'மதங்கள் சாதி மடமை இன்றி மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே விதந்து பிறரின் மதத்தில் சென்ற, வினைகள் மாற்றப் புறப்பட்டேன்’ என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண்iசமமும், திறமுடன் சங்க காலத் தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார். - 'இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின் இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு: தம்மதம் பெரிதெனச் சாற்றிப் பிரியாதே-தமிழா தமிழால் ஒன்றுசேர் தமிழினம் கூடு” - என்றும் பெருங்கவிக்கோ கூறுகிறார். மனித நேயக் கருத்தையும் எடுத்துக்கூற அவர் தவறு. வில்லை. நடமாடும் மனிதர்களே நம் கோயில் என்று: சொன்ன சித்தர்களின் சிந்தனை வீச்சு பெருங்கவிக்கேன் கவிதைகளிலும் பொறி தெறிக்கிறது. -