பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у முன்னேறத் துடிக்கும் ஒரு மனிதனுக்கு முதன்மை யான முதல் என்பது எண்ணங்கள் தான். எண்ணங் களை, மனத்துக்கண் மாசின் றி ஒழுங்கு படுத்தத் தெரிந்து உழைப்பவன்- கற்றனைத்து ஊறும் அறிவைப் பெருக்கிக கொள்பவன் காலத்தோடு கைகோர்த்து- தடைகளை மீறி உன்னத உந்துதலோடு ஒடினால் அந்த ஒட்டத்தின் ஈட்டமாக எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்மை வெல்கிறது. மேலும் வளர்கிறது என்பதே உண்மை. யார் என்னைப் பாராட்டினாலும், துாற்றினாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், எனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் கவனமாக உள்ளேன், கரு விலேயே திருவாக வந்தவன் கவிஞன் என்கிறார்கள் ஆனால் அந்தக்கருவை வளர்க்கக் காலம் தரும் படிப்பினை களைப் புறக்கணிப்பவர்கள் கருவிலேயே திருவாக வந்தாலும் கவிஞன் என்ற முழுமை அடைய முடியாது. கருவில் திரு இல்லா விட்டாலும்கூட, இதயத்தின் எழுச்சி கள் கருக்கொண்டு காலத்தை வெல்ல வைக்கும். பிறவிக் கவிஞன் என்பது - இருக்கும் திறமையை இடைவிடாமல் வளர்த்துக் கெயன்வதிலேயே நிலைப்படுத்தப்படுகிறது. பள்ளிப் பருவத்தில் இலக்கணம் அறியாமல் எழுதிய வைகள்-பின்பு மிகச் சிறந்த முறை எழுதும் நல்ல கவிஞர்கள் பாராட்ட எழுதிய கவிதைகள். இவன் என்ன எழுதுகிறான்' என்று வெட்டியும், நன்றாக எழுது கிறாய்” என்று, தட்டிக் கொடுத்தும் வளர்ந்த வளர்ச்சி கள்-அனைத்தையும் கடந்து மீறி வந்த தனித்தன்மையால் 'இவனா பெருங்கவிக்கோ!'-என்னும் வியப்பாட்சியை எழுத்துத் தவஞானி வல்லிக்கண்ணனார் எமுதிய இந்தத் திறனாய்வு நூல் லிளக்கமளிக்கிறது. என்றன் முப்பத்தி மூன்றாம் வயதில் என் முதல் கவிதை நூலான 'நெஞ்சத் தோட்டத்’தை வெளியிட் டேன். அந்த நூல் முன்னுரையில் கவிதைத் துறையில்