பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர். 0 6: மக்கள்யார் உண்டாலும் இனிக்கும், ஒப்பில் மனத்தடுப்பில் இச்சுவையைக் காய்ச்சிக்கட்டி - தக்கமுறை வரஉண்ணும் தத்துவம் போல் சாகாத 'சன்மர்ர்க்க இனிமை விண்டார்!’ வள்ளலார் குறித்துக் கவிஞர் மனம் லயித்துப் பாடி யுள்ள பாடல்கள் படித்துச் சுவைத்து மகிழ்ச்சியுறத் தகுந்த இனிய படையல்கள். அவற்றில் ஒன்று பொருள்விளக்கே பெரிதென்றே எண்ணித் தீய பூரியர்கள் ஆட்டங்கள் போட்ட போது அருள்விளக்கே மெய்யென்று துணிந்து செய்கை அகல் விளக்கை ஏற்றியென்றும் அணையா இருள் விலக்கச் செய்ததவ ஞானி எங்கள் ஈடில்லா வள்ளலாரின் தாள்கள் நெஞ்ச மருள்விலக்கும் பேரமுத ஊற்றாம் என்றும் வற்றாத சீவநதி இன்பப் பாய்ச்சல்!” இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: - இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும் இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு அருட்தன்மை எல்லேர்ர்க்கும்.காட்டுவதாய் இல்ல்ை அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார்