பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வல்லிக்கண்ணன் பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே மருட்தன்மை அடையாமல் சமரசத்தைக் கொண்டே மன்பதையில் உய்வழியை வள்ளலாரே கண்டார்!’ இன்னொரு இடத்தில் இவ்விதம் இசைத்திருக் கிறார்: "வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை வாய்மை யென்றே நம்பியே மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே வழக்காடும் தன்மை யன்றோ? - உன்மதம் என்மதம் ஒன்றாகி மனிதர்கள் ஒரு மதம் சமரச மாகி உள்ளொளி வள்ளலார் உயிராசை வென்றால் உலகமே ஒர்குடும்பம் அன்றோ?' - பெருங்கவிக்கோ தனக்குச் சரி என்று படுவதைதனது உள்ளத்தில் தோன்றும் உண்மையை-அப்படி அப்படியே வெளிப்படுத்தும் இயல்பு பெற்றிருக்கிறார். "ஆண்ட வன்தாள் போற்றுவதில் ஆன்றோரே மகிமையிலை, பூண்ட இறைமைப் பணியாம் புரிசேவை செய்பவர்கள் நற்பணி தொழ யானும் நாணவில்லை! இந்நாட்டில் புற்றரவுக் கூட்டம் போல பொல்லாத செய்துவிட்டு