பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 3 கிே இறைவனின் பெயராலே ஏமாற்றம் நடத்துகின்றார் குறைமதியர் இவரைவிடக் கோடிமேல் தொண்டிரென்பேன்!” இவ்வாறெல்லாம் அவர் கருத்துக்களை ஒளிபரப்புவ தனால் அவர் ஒரு நாத்திகர் என்று பலர் எண்ண இடம் ஏற்படுகிறது. - கவிஞர் ஆணித்தரமாக அறிவிக்கிறார் "ஆத்திகம் என்பதும் நாத்திகம் என்பதும் அவரவர் மனப்போக்கு தீத்திறம் இரண்டிலும் உண்டென்றே உண்மை தெளிவதே நன்னோக்கு! மதங்கள் பலவாறு மல்கியதே வையம் மடமையை மாய்த்ததுவா? விதவிதமாகவே வேதங்கள் காட்டலால் வேதனை மாறியதா? உதவிகள் நன்மை உண்மை யென்பதும் ஒருமத உடைமையல்ல - அதர்மமும் தர்மமும் ஆத்திகம் நாத்திகம் அறைவதில் மட்டுமில்லை.” பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய் கூறுகிறார். எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவு படுத் தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன.