பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 65 உண்மையான ஆன்ம வழி நடை பயிலும் அருளாளர் கவிஞர் சேதுராமன் என்பதை அவரது கவிதைகள் பறை. சாற்றுகின்றன. தன்னைப் பற்றி அவரே கூறியிருப்பது: கவனத்துக்குரியது: போதை இல்லாத நீதிக் கவிஞன் நான். பாதை என்பாதை பண்பான சீர்பாதை! கைக்கூலி கட்குக் கைகட்டி வாய்பொத்திப் பைக்கூலி பெறுகின்ற பாதையென் பாதையல்ல. மெய்க்கூலி பெறுதற்காய் மேன்மையாம் ஆன்மீகத் தெய்வத்தாள் பற்றித் திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன்."