7. அறச் சீற்றமும் புதுமை நோக்கும்
துறை தோறும் மண்டிக் கிடக்கின்ற சிறுமைகளும் சீரழிவுகளும் பெருங்கவிக்கோவின் உள்ளத்தை உறுத்து கின்றன. அவரைக் கோபம் கொள்ளச் செய்கின்றன. ஐயோ, நம் நாடும் நம் மக்களும் இப்படி இருக்கிறார்களே என்ற வேதனையால் எழும் அறச்சீற்றம் அவர் கவிதை களில் சூடாகப் பரவிப் பாய்வதை பல இடங்களில் காண முடிகிறது. ‘நமக்குள் தமிழர்க்குள் நாம் காணும்
பெருங்குறை என்? நமக்குள் நாமே நாவளர்த்து நயம் பேசி கருத்து வேறு பாடுகளைக் கடை விரித்து,
நாசத்தை விருத்தி செய்வதன்றி வேறுவினை கண்ட
தென்ன?” என்று அவர் கேட்கிறார்.
நாட்டில் எங்கெங்கும் காணப்படுகிற முரண்பாடு களை நெஞ்சில் பதியும்படி அவர் எடுத்துச் சொல்கிறார்
ஊருக் குழைப்பதாய்க் கூறுகின்றார்-பொது உண்டியலில் கையை வைக்கின்றார்-அந்தோ யாருக்கோ உபதேசம் கூறுகின்றார்-சொந்த தம் வாழ்வில் ஊழலைச் சேர்க்கின்றார்-அட
பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/76
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
