பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் இ? பேருக்கோ திரிந்து அலைகின்றார்-செத்த பிணம், போல் வயிறை வளர்க்கின்றார்தேருக்கச் சாணியைப் பிடுங்கிவிட்டு-ஐயோ தெருவில் ஊர் உலாவருகின்றார்: கூட்டம் கூட்டி முழக்குகின்றார்-பின்னே கும்மாளம் போட்டுக்கேடு செய்வார்-பேச்சில் தேட்டம் எல்லார்க்கும் பொது என்பர்-வாழ்வில் சேர்ப்பதனைத்தும் தனக்கே என்பார்-பசி வாட்டம் போக்கும் வழி அறிந்தும்-அந்த வாசல் தன்னை அடைத்து விட்டே ஏட்டில் எழுதிக் கிழிப்போம் என்பார்-நெஞ்சில் எத்தனை எத்தனை நிலைத்தவைகள்!" எழுத்தாளர் என்றும், எழுத்தினால் பாரைத் திருத் திடுவேன் என்று பெரும் பேச்சு பேசி அகந்தை வளர்க்கும் பேனா மன்னர்கள் பற்றிய உண்மையை கவிஞர் சித்தரிக் கிறார். "எழுத்தால் திருத்துவேன் என்று வந்தான் -தன்னின் எழுதுகோலில் நஞ்சை வைத்தான்-வாயில் கொழுத்த திமிராம் வஞ்சம் வைத்தான்-நெஞ்சில் கோடிப் பாம்பைக் கொஞ்ச வைத்தான்-அட பழுத்த எட்டி மரம் போலக்-கனிந்து காரை ஏய்த்துப் பிழைத்து விட்டு-அட அழுத்தமாக நான் எழுத்து வேந்தன் என அந்தோ அஞ்சாமல் கூறி நிமிர்ந்து நின்றான்.”