பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi வெற்றி பெறுவது வழுக்கல் மரம் ஏறுவதைப் போன்றதுசாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பது இத்துறைக்கு மிகப் பொறுத்தம் என்று எழுதியுள்ளேன். ஆனால் இந்த வழுக்கல் மரம் ஏறுவதில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற மனநிறைவு தோழர் வல்லிக்கண்ணன் எழுதிய இந்த நூலைப் படித்த போது என்னுள் முகிழ்த்தது. தமிழ்க் கவிதைத் துறை தொன்மை வாய்ந்தது. நம் அன்னை மொழிக கவிதைகளின் ஆழத்தையும் அகலத் தையும் எண்ணி நாம் மலைத்தால்-இந்தத் துறையில் புகவே எண்ணம் வராது. அத்தனை பழமையும்-புதுமை யும் பதிந்துள்ள நம் தமிழ்க் கவிதைத்துறையில்-ஒரு கவிஞன் என்று பெயர் பெறுவதே கடினம். இந்த மலைப் பையெல்லாம் தாண்டிக்கடந்து காலத்தின் அடிச்சுவடிகள் பற்றிக் கவிதைக் கடமைகளைச் செய்துள்ளேன். மகாகவி பாரதியாருக்குப் பிறகு கவிஞர்களே இல்லை என்று எழுதியது ஒரு இதழ். இவாகளால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் வர வில்லை! மற்றும் சிலர் அவரவர் மனதிற்குத் தக்க ஒவ்வொருவரைப் பிடித்துக் ாெண்டு, இவன்தான் கவிஞன் அவன்தான் கவியரசன் என்கின்றனர். பாரதிக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் இனிக் கவிஞன் தமிழகத்தில் பிறக்க மாட்டான் என்று சில ஆண்டு முன்பு ஒரு இதழ் எழுதியபோது, "ஆயிரம் ஆண்டினிக் கவியிலையா?-ஏன்? ஏன்? அடியேன் இருக்கின்றேன்-இந்தப் பாயிருள் ஞாலம் அழிக்தொழிந்தாலுமென்-ஒங்கும் பாக்கள் அழியாது தோழர்களே’ என்று என் தமிழ்ப்பணி இதழில் எழுதினேன். இன்றைய வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு நான் ஒன்றைக் கூறுவேன்- நமக்கு முன் வளர்ந்து உயர்ந்த வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற பெரும்பெம்