பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 73 அறிவின்றி அமர்ந்தார் நம் அறம் மறந்தார் மறம்துறந்தார்! நெறியதுவே என்று நெடிதுநாள் கழித்து விட்டார். வேறொரு இடத்தில், இன்றைய இழிநிலையை இவ்விதம் விவரிக்கிறார் 'கிடைத்ததைச் சுருட்டித் தம்தம் கிழமையே வளர்க்க எண்ணும் உடைப்பெரும் சுயநலத்தார் உயிர்த்தமிழ் நாட்டில் இன்றோ நடைப்போடப் பெருகி விட்டார் நானிலப் பொதுந லத்தை விடைகூறி அனுப்பி விட்டார், விடிவெள்ளி மறைத்தார் அம்மா! புரிந்தவர் கூட இந்நாள் புரியாமல் நடிக்கின் றார்கள். சரியான கொள்கை நெஞ்சம் தானேற்கும் கொள்கை கூறத் தெரியாமல் அல்ல! சொன்னால் தினக்கூலி கிடைக்கா (து) என்றே உரிமையை அடகு வைத்தார் உயிர்ப்பெரும் அறிஞர் இந்நாள்' நாட்டைக் கெடுப்பவர்களில் அரசியல் வாதிகள் முக்கியமானவர்கள். மொத்தமாய் நாட்டின் மோசம் நீக்கிட அவர்கள் சித்தம் வைப்பதில்லை. அவரவர் கட்சிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதிலேயே அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். அதற்காக அவரவர் ೧ಹಣಣ ஒதுக்கிவிட்டு கூட்டுச் சேர்கிறார்கள், ஆ