பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 79 பெருங்கொள்ளைக் காரரெல்லாம் இன்று நாட்டின் பெருஞ்செல்வன் ஆகிவிட்டார்! இன்பே இல்லாக் கருங்கல்போல் நெஞ்சுடையா ரெல்லாம் இன்று கருணைமிகு வள்ள லெனப் பெயரெ டுத்தார்! அருஞ்செயலைச் செய்கின்றோன் சாக, ஒன்றும் அறியாத அயோக்கியனோ உயர்ந்து - வாழ்ந்தான்! துரும்பாக இவரையெலாம் மதிக்கும் நாளே தொழத் தகுநல் சான்றோர்க்கு விழாநாள் * so,35ta ... ... ... ... ஏதுசெய்தும் - தம்படிகள் சுருட்டுவதே நோக்கம் வைய அரங்கத்தில் உழைப்போர்கள் வாட, உண்மை அயராது போற்றுபவர் ஒட தீய கரங்கொண்ட கயவர்கள் வலிமை கொண்டார்! கவினுலகை ஆள்கின்றார் விடிவுண்டாமோ? சந்தையிலே விற்கின்ற பொருளாய் நம்மைச் சனநாயகப் பெயரால் வாட்டி ஆட்டு மந்தையென மேய்க்கின்றார்! அறிஞரெல்லாம் வால்பிடித்து வாழ்கின்றார் ஆள்வோர் தம்மை! சிந்தனையைக் கூர்மை செயவோர் இலையா? உண்டு! தினக்கூலி வாங்கியவர் ஊமையானார்! நிந்தனைகள் கூறுவதாய் நினைக்கக வேண்டாம்! நிலையீது! இதை மாற்ற என்பா போர்வாள்! எல்லாம் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருப்பது மக்களின் இயல்பாக இருக்கிறது. இந்த