பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii கவிஞர்களைப் படித்து வியந்து அதிலிருந்து அறிந்து நம் கவிதைக் கொள்கையில் அஞ்சாமல் ஏற்றம் பெற வேண்டுமே அன்றி அச்சப்பட்டு ஒதுங்கி விடக்கூடாது “தம்மில்தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்(கு) எல்லாம் இனிது’ என்பது திருக்குறள். தன்னைவிடத்தன் மகன் அறிவுடமை யாளன் என்பது மன்னுயிர்க்கெல்லாம் இனிமையானது என்று திருவன் ருவரே கூறுகிறபோது அவன் சந்ததி களுக்கு மட்டும் பொருந்தாது போய் விடுமா? எனவே நம் பழமையான இலக்கிய வழிவழி முன்னோர்களின் அடிச்சுவடுகள் பற்றி அறிவுடைமை யான கவிஞர்கள் ஒரு மொழியில் தோன்றுவதுதான் அம்மொழிக்குப் பெருமையே அன்றி இனி ஆயிரம் ஆண்டிற்குக் கவிஞன் இல்லை-என்று முடிவெடுப்பது அறிவுடைமை ஆகாது. - - நான் பள்ளிப் பருவத்திலிருந்து எழுதிக் கொண்டிருந் தாலும், என் முதல் கவிதை தினமணி நாளிதழின் பொங்கல் மலரில்தான் வெளி வந்தது. எனவே இப்பொங்கல் தைத்திங்களில் பிறந்த இரண்டாம் மகனுக்குக் கவிஅரசன்" எனப் பெயர் வைத்தேன். அதன் பின் அவன் பெயரிலேயே கவிஅரசன் பதிப்பகம்’ எனத் தொடங்கிானன். முகவை-ஏர்வாடியில் பணியாற்றிய போது நெஞ்சத்தோட்டம் என்ற நூல் மட்டுமே வெளி வத்திருந்தது. 1967-ஆம் ஆண்டு, முகவையில் பணியாற்றிய தமிழா சிரியப் பணிக்கு ஒர் தன் மான நெருக்கடி ஏற்பட்ட போது சென்னை வந்தேன். சென்னையைத் தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் படத்துறைக்குப் பாட்டெழுத வேண்டும் என்பதாகும். பத்தாண்டுகள் உச்சமான :முயற்சி-தோல்வி மேல் தோல்வி கண்டபின் , என்றன்