பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வல்லிக்கண்ணன் நிலை கவிஞருக்குச் சீற்றம் தருகிறது. அவருடைய சிந்தனைச் சீற்றம் மூடிமறைக்காத சொற்களாகப் சாய்ந்து புரள்கிறது. அவற்றில் பெருங்கவிக்கோவின் முநபோக்கு எண்ணம் கல்ைகிறது. 'வஞ்சச் செயலால் வாழும் சிறுமதியர் தஞ்சமாய் எல்லாம் தனி இறைவன் r செயலென் பார்: கூடிக் கெடுக்கும் குணங் கெட்டார் கூடத்தான் நாடியே எல்லாம் நனி இறைவன் செயலென்பான் பேடிக்குணத்தார் பித்தலாட்டக் கொடியவர்கள் வாடிக்கை யாயெல்லாம் வாழிறைவன் செய லென்பார் : அடுத்துக் கெடுப்பவர்கள், அடங்காது நடப்பவர்கள் படுத்துக் கிடந்தே பால்தேனும் பழரசமும் விதவிதமாய் உண்பவரும வெல் இறைவன் செயலென் பான் கூனிக் குறுகிக் கும்பி வயிற்றுக்காக ஆனமட்டும் போராடி அயர்ந்தாரும் கூடத்தான் எல்லாம் இறைவன் இனிய செயல் என்கின்றான்! குடிப்பதற்குக் கூழ்கூடக் கும்பிக்கு இல்லாமல் வெடித்துக் குமுறுகின்ற வீரன் ஏழைமகன் துடிக்கும் பொழுதினிலும் தூயஇறை செய லென்பான் படித்த படிப்பும் பாடமெலாம் ஈதொன்றே! கட்டழகி இன்பம் கனியழகி நஞ்செய்யிலே நட்டு உழைக்கும் நனியழகி நம்நாட்டில் உடுத்துதற்கும் கூட ஒராடை நூலாடை எடுக்க முடியாமல் ஏழ்மையிலே வாடுகின்றாள்