பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 82 எல்லாம் இறைவன் செயலென்றே! ஆனாலும் வல்ல செருக்குடைய வனிதை மாடியிலே உல்லாச மாயிருக்கும் ஒரத்துச் சன்னலுக்கும் சில்லாடைப் பட்டாலே திரையிட்டு வாழ்கின்றாள்! இவர்களும் கூடத்தான் இறைவன் செயலென்பார்: தவமும் பாவமும் சரிசமமா சிந்தியுங்கள்! என்ன கொடுமை? இழிவான மடமையிது!’ வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேசவந்த பெருங்கவிக்கோ இற்றைநாள். அமைச்சர்கள் குறித்து சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறி யிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ் வரிகள். கவிஞர் பாடுகிறார். அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம் இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக் காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத தாழ்ப்பால்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்! சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்! இல்லாதான் தன்னை எப்பொழுதும் வாய்வைத்துச் செல்லாக் காசாக்கிச் செகப்புரட்சி செய்கின்றார்! துரங்காமல் தூங்கிச் சுகம் பெற்றுத் தொழிலாளர் ஏங்கும் நிலைவளர்த்து எத்திலே பிழைக்கின்றார்: உழவர் பெருங்குடியை ஊஞ்சலாய்ப் பயன்படுத்தி அழகாக ஆடி ஆர்ப்பரித்து வாழ்கின்றார்! வாயடியால் கையடியால் வருகின்ற பொய்யடியால் 需 போயடித்து வெற்றிப் புன்னகையில் மிதக்கின்றார்: