பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வல்லிக்கண்ணன் கோவிந்தா கோவிந்தா என்றொருவன் குரல் எழுப்பி, கொடும் வெயிலில் சாலையிலே உருளுகின்றான் வயிற்றுக் காய்! கோவிந்தா கோவிந்தா என்றே மற்றொருவனும் தான் கோபுரம்போல் மாளிகையில் பணச் செருக்கில் புரள்கின்றான் கும்பிட்ட இருவருக்கும் கொடுத்ததிலே வஞ்சமென்றால் கும்பிட்ட ஒருவன் நீ கொடுங்கோலன், அன்றோ? சொல்!” என்றும் திருப்பதி ஏழுமலையானை கேட்கிறார் கவிஞர். "வம்புக்குச் சொல்லவில்லை வடவேங்கடத்தானே! வந்து குவிகின்ற பொருள் உனக்கு ஏன்? வறியார்க்கே தந்துவிடு: என்றும் கூறுகிறார். கடவுள் எனக்குக் கடன்காரன் எனக் கூறும் கவிஞர் ஏன் அவ்விதம் கூறுகிறார்? 'கடவுளே, நீ எனக்குக் கடன்காரன், அருள் கதவை அடைத்த கொடுங்கோலன்!' என்று கடவுளிடமே அவர் கூறுகிறார். எனக்குத் தானாடா நீ கடன்காரன்? இங் இருப் போர்க்கெல்லாம் தான் கடன்காரன் என்றும் சொல் கிறார். அது எப்படி? "உனக்கும் உதவினேன் உண்டியல் பெயரால் உதவிக்கு உதவி உதவாச் செயலால் நீ எனக்குக் கடன்காரன் என்கிறார்.