உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


பரிசாரகன் வந்தான்; காப்பி கிளாஸ்; சாஸர்; இரண்டு ‘செட்’டையும் ஒன்றன் மீதொன்றாக அடுக்கியவாறு கொண்டு வந்து மேஜையில் வைத்து, மேலிருந்த ஜோடியை எடுக்கையில் கை தடுமாறவே, இரண்டு கிளாஸ் காப்பியும் மேஜைமீது சிதறி வழிந்து மாலதியின் அழகிய புடவை துணியை நனைத்தது.

‘ஏம்பா, நீ புது சப்ளையரா?...கொஞ்சமாவது மூளை இருக்க வேண்டாமா?...’ என்று பொரிந்து தள்ளினாள் மாலதி. சிவந்த முகம் மேலும் ரத்தச் சிவப்பானது.

‘கோபித்துக் கொள்ளாதீங்க; வேறே கொண்டு வந்திடறேன்!’ என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான் ‘சப்ளேயர்’. அந்தச் சமயத்தில் ஹோட்டல் முதலாளியே வந்துவிட்டார். ‘ஏப்பா, நீ வா!’ என்று குரல் கொடுத்தார். குங்குமப்பொட்டு அணிந்து நாடகக்காரன் போன்றிருந்த ஒரு நபர் வந்து நின்றான்.

‘இரண்டு கப் காப்பி!’ என்று உத்தரவிட்டாள் மாலதி, அவன் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டே விழிகளைக் கூர்மைப்படுத்திய நிலையில் ஏனோ தடுமாற்றத்தின் சுவடு காணப்பட்டது. பவுடர் பூசப்பெற்ற வதனத் திரையில் பனி முத்துக்கள் கோலம் போட்டிருந்தன! காப்பி அருந்தினதும், மெளனமே உருவாக தோழிகள் இருவரும் வெளியேறினார்கள். சாவித்திரியின் வீட்டு முகவரி அடங்கிய துண்டுக் காகிதம் மாலதியின் டம்பப் பைக்குள் சென்றது; சில்லறைக் காசுகள் குலுங்கின. விடை பெற்றுப் பிரிந்தனர்.

சாவித்திரியின் இதயம் புலம்பிக் கொண்டிருந்தது. தலை கனத்துக் கிடந்தது. நொடிக்கு ஒரு முறை பெரு மூச்சுப் பிரிந்தது. கழுத்தில் ஊசலாடிய தாலிக் கயிற்றில்兴 o: ※