பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


சந்தோஷமாயிருக்கும். நித்தங்கூலிக்குக் குறுவை நடவுக்குப்போய் கெடச்ச பணத்திலே 'சுங்கடி' சேர்த்த பணத்தை உன்னோட தீவாளித் துணிமணிகளுக்காகவே தான் கட்டிக் காப்பாத்தி வச்சிருந்தேன் பொன்னரசி!"

அவன் விம்ம, அவள் விம்மினாள். மூச்சின் மூச்சுத் துடித்தது.

"மச்சான், இங்கனே பாருங்க!" அவளுடைய கைகள் பற்றியிருந்த புத்தம் புதிய வேஷ்டி, சட்டையில் அப்போதுதான் அவன் பார்வை பற்றியது. அவன் திசை திரும்பிப் பார்வையைத் திருப்பினான். அதிசயம் குறுக்கோடிய விழி விரிப்பிலே ஆத்திரம் ஆட்டக் காயானது. வாழ்க்கை சதுரங்க விளையாட்டுத்தானே?

"மச்சான், பாருங்க!"

அவளைப் பார்த்தான் அவன்.

"பொன்னு! பானையிலேயிருந்த அந்தச் சீலையும் ரவிக்கையும் எங்கே ?...."

"அதுக ரெண்டையும் அடகு வச்சுப் பணம் சேர்த்துத்தான் மச்சான் ஒங்களுக்கு புதிசு வாங்கியாந்தேன். உங்கிட்டே இருந்த பணம் எனக்குத்தான் காணும், நீங்க ஒங்களுக்கு ஒண்ணும் வாங்கமாட்டீங்கன்னு ரோசிச்சுத்தானுங்க இப்படிச் செஞ்சேன். அடுத்தச் சந்தைக்குள்ளே நான் பணம் சேகரம் செஞ்சு எப்படியும் ஆச்சிவிட்டுத் துணிமணிகளை கமுக்கமா மீட்டுப்பிடுறேனுங்க!"...

கிளிக்குத்தான் கொஞ்சத் தெரியுமா? "அடி பாவி"

அடித்தது கை; அலறினான் அவன்

"வராத்து கணக்கிலே வந்துபோன என்னேட தெய்வதுக்குக் கேடு செஞ்சுபோட்டாயே நீ!... நான் சொல்-